வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013



••• Friday Reminder •••

» Look after your Personal Hygiene. [Have Ghusl, Do Miswak, Trim Nails, Apply Itr, Oil & Surma]
» Read Surah Al-Kahf.
» Try to reach the Masjid early.
» Recite Durood-e-Ibrahimi as much as you can.
» Remember whole Ummah in your Sincere Du'aas InshaAllaah.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....
திருமணம் தேவையில்லை!

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5065
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுததக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்

Assalamu Alaikum varah!

Ashahadu alla ilaha illa Allah u wa ashhadu anna Muhammadan abduhu wa rasūluh.
(All the salutations, prayers and nice things are for Allah. Peace be on you O Prophet, and the blessings of Allah, and His grace. Peace on us and on all the righteous servants of Allah. I bear witness that none but Allah is worthy of worship and bear witness that Muhammad is the servant and messenger of Allah.)
அல் குர்ஆன் – 27:19 ...................................... இன்னும், 'என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்.
இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப்பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்துள்ளான்.


அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப்பெறும்.



1."வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பு அதிகம்.

2."தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.

3."முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.


அது போல, பெண்களே...!!! உங்கள் உடல் என்பது புனிதமானது.. அபூர்வமானது.. வைரம், தங்கம் மற்றும் முத்தை விட மிகவும் விலை மதிப்பு மிக்கது.


அதனால் உங்கள் உடம்பை பாதுகாப்பான முறையில் ஆடையுடுத்தி, அழகுப்படுத்தி கொள்வது நல்லது".

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்....
.:: Bismillah ::. •• Ramadan Day 16 - Dua ••

“O Allah, on this day, grant me compatability with the good, keep me away from patching up with the evil, lead me in it, by Your mercy, to the permanent abode, by Your Godship, O the God of the worlds.”

A'ameen Ya Rabbul A'alameen♥
Say A'ameen & participate in this Dua.