வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!

பெண்ணைப் பெற்றவர் படும் பெருமை!
பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தினை பறைசாற்றும் பொன்னார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சில பொன்மொழிகள் இதோ!

1. எவர் தம் இரண்டு பெண் மக்களை அவ்விருவரும் பருவமெய்தும் வரை நன்றாக வளர்க்கின்றாரோ அவர் இறுதி நாளில் என்னோடு இவ்வாறு வருவார் என்றுரைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு முஸ்லிமான சகோதரனிடம் இரண்டு பெண் மக்களிருக்க அவர் அவர்களை நல்ல முறையில் வைத்துக் கொண்டால் அவரை அவ்விரு மக்களும் சுவனத்தில் சேர்த்து வைப்பர். (நூல் : புகாரி)

3. எவர்களிடம் பெண்மக்கள் மூவர் உள்ளனரோ அவர், அவர்களிடம் பொறுமை காட்டியும், தன் சக்திக்கு இயன்ற மட்டும் நல்ல ஆடைகளை அவர்களுக்கு அணிவித்தும் வந்தாரோ அவருக்கு நரக நெருப்பைத் தடுக்கும் திரையாக அம்மூவரும் அமைந்துள்ளனர். (நூல் : புகாரி)

4. ஸுராகா ரளியல்லாஹு அன்ஹு என்ற தோழரிடம் மிகப் பெரும் தர்மத்தைக் குறித்து தாங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ஆம்! அறிவித்துத் தாருங்கள் என அந்த ஸஹாபி கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ''உம்மிடம் மீண்டு விட்ட தலாக்கின் மூலமோ, அல்லது விதவையாகவோ உமது மகளாகும் அவளுக்கு உம்மையன்றி சம்பாதிக்கும் வேறொரு நபர் இல்லாத நிலையில் (இதுவே மிகப் பெரும் ஸதகாவாகும்)'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். (நூல் : புகாரி)

5. பெண் மக்களால் ஏதேனுமொன்றைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் எவர் நன் முறையில் நடந்து கொள்கின்றாரோ அவரை நரகை விட்டு தடுக்கும் திரையாக அவர்கள் ஆகிபிடுவர். (நூல்: புகாரி, முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக