வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சகோதரிகளே! நம்மில் எத்தனை பேர் இஸ்லாத்தை பற்றி படித்திருக்கிறோம்
நமக்கு இஸ்லாத்தை பற்றிய அறிவு என்ன ? சிந்தித்தோமா ?
1 . இஸ்லாம் என்றால் என்ன ?
2 . ஈமான் என்றால் என்ன ?
3 . இஸ்லாத்தின் அடிப்படை எத்தனை ? ஈமானின் நம்பிக்கை எத்தனை ?
4 . வானவர்கள் என்பவர்கள் யார் ? அவர்கள் பணி என்ன ?
5 . அல்குரான் ஓத தெரியுமா ? அல்லது ஓத முயற்சி எடுத்தோமா ?
6 . அல்லாஹ் என்பவன் யார் ? அவன் வல்லமை என்ன ? பண்புகள் என்ன ?
7 . எத்தனை நபிமார்கள் வரலாறு தெரியும் ?
8 . மறுமை என்றால் என்ன ? அது எப்போது வரும் ?
9 . சொர்க்கம் என்றால் என்ன ? நரகம் என்றால் என்ன ?
10 . எல்லாரும் தொழுகிறோம் ஆனால் இறையச்சத்துடன் உயிர்ரோட்டமாக செய்கிறோமா ?
11 . அல்லாஹ் எப்போது நேசிப்பான் அல்லது கோபிப்பான் தெரியுமா ?
12 . ஈமானே இல்லாமல் சொர்க்கம் செல்ல முடியாது நாம் தொழுதாலும் பிற அமல்கள் செய்தாலும் என்பது தெரியுமா ?
13 .மரணிக்கும் முன் ஒருவரையாவது இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா ?
14 . எத்தனை சூராக்களை மனனம் செய்துள்ளோம் .?
15 . ஜனாஸா தொழுகை எப்படி தொழவேண்டும் என்பது தெரியுமா ?
மாஷா அல்லாஹ்!...ஒவ்வொரு முஸ்லீமும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய...விஷயங்கள்!
சிறந்த முஸ்லீமாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற நினைக்கும் அனைவரின் நெஞ்சங்களிலும் ஊடுருவ வேண்டிய கேள்விகள்...சுபுஹானல்லாஹ் !
அல்லாஹ் எனக்கும் , உங்களுக்கும் மார்க்கத்தை முறையாக கற்று அதன் படி நடக்ககூடிய நற்பாகியத்தை தருவானாக ! ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக