ரமழான் மாத நோன்பு அம்மாதப் பிறை கண்டதும்,அல்லது ஷபான் மாதம் முப்பதாவது நாள் முடிவின் இரவில் நோற்பது வாஜிபு.
நோன்பு கடமையாவதற்கு நான்கு ஷர்த்துக்கள் உண்டு.
1 .இஸ்லாம் - முஸ்லிமாய் இருத்தல்.
2 .அல் புலூக் - பிராய மெத்தியிருத்தல்.
3 .அல் அக்ல் - புத்தி சுவாதீனமுள்ளவராயிருத்தல்.
4 .அல் குத்றத் - சக்தியுள்ளவராயிருத்தல்.`
சிறுவர்,சிறுமியர்கள் (புத்திதெரிந்து ) பத்து வயதை எத்தியதும் பெற்றோர் அவர்களை நோன்பு நோற்குமாறு ஏவ வேண்டும்.மாதவிடாய்க்காரிகள்,பெ ரும்பாட்டுக்காரிகள்
நோன்பு நோற்பது கூடாது.ஆனால் பிறகு களாச் செய்ய வேண்டும்.இவர்கள் நோன்பு காலங்களில் குர் ஆனைத் தவிர மற்ற எல்லா ஓதல்களையும் ஓதலாம்;ஸலவாத்து,திக்ர்,தஸ்பீஹ் செய்யலாம்.இவர்கள் நோன்பு நோற்காத நாட்களுக்கு ஒவ்வொரு "முத்து"கொடுக்க வேண்டியதில்லை.
நோன்பை விடுவதற்கு ஆகுமானவர்கள்:
1 . வயோதிபர்
2 . நோயாளி
3 . கடுமையான தாகம் அல்லது பசி
4 .வேலையில் பராக்காய் இருப்பது.(அதனால் நோன்பு நோற்பது கொண்டு தங்க முடியாத கஷ்டம் உண்டாகுதல்).
5 .பால் கொடுக்கும் தாய்மார்.(நோன்பு நோற்பதனால் கடுமையான கஷ்டம் உண்டானால் மட்டும்.)
6 .வீட்டு மிருகங்களிலொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
7 .பிரயாணம்
இத்தகையோர் தாம் விட்ட நோன்புகளை மீட்கவும் ஒவ்வொரு 'முத்து'கொடுக்கவும் வேண்டும்.பிரயாணிகள் மூன்று காரணங்களுக்காக மட்டுமே நோன்பை விடலாம்.
1 . பிரயாணம் குறுகியதாக இருக்க வேண்டும்.(ஆகுமான அல்லது ஆகாத பிரயாணமாக இருந்தாலும் சரியே)
2 .பிரயாணம் நோன்பை விட முந்தியதாய் இருக்க வேண்டும்.
3 .விட்ட நோன்பைக் களாச் செய்வது முடியுமானவர்களாயிருத்தல்.
எனவே,நீண்ட பிரயாணிக்கு நோன்பை விடுவது ஆகாது.இவரும் பிறகு களாச் செய்ய நாடினால் விடுவது ஆகும்.
நோன்பு கடமையாவதற்கு நான்கு ஷர்த்துக்கள் உண்டு.
1 .இஸ்லாம் - முஸ்லிமாய் இருத்தல்.
2 .அல் புலூக் - பிராய மெத்தியிருத்தல்.
3 .அல் அக்ல் - புத்தி சுவாதீனமுள்ளவராயிருத்தல்.
4 .அல் குத்றத் - சக்தியுள்ளவராயிருத்தல்.`
சிறுவர்,சிறுமியர்கள் (புத்திதெரிந்து ) பத்து வயதை எத்தியதும் பெற்றோர் அவர்களை நோன்பு நோற்குமாறு ஏவ வேண்டும்.மாதவிடாய்க்காரிகள்,பெ
நோன்பு நோற்பது கூடாது.ஆனால் பிறகு களாச் செய்ய வேண்டும்.இவர்கள் நோன்பு காலங்களில் குர் ஆனைத் தவிர மற்ற எல்லா ஓதல்களையும் ஓதலாம்;ஸலவாத்து,திக்ர்,தஸ்பீஹ் செய்யலாம்.இவர்கள் நோன்பு நோற்காத நாட்களுக்கு ஒவ்வொரு "முத்து"கொடுக்க வேண்டியதில்லை.
நோன்பை விடுவதற்கு ஆகுமானவர்கள்:
1 . வயோதிபர்
2 . நோயாளி
3 . கடுமையான தாகம் அல்லது பசி
4 .வேலையில் பராக்காய் இருப்பது.(அதனால் நோன்பு நோற்பது கொண்டு தங்க முடியாத கஷ்டம் உண்டாகுதல்).
5 .பால் கொடுக்கும் தாய்மார்.(நோன்பு நோற்பதனால் கடுமையான கஷ்டம் உண்டானால் மட்டும்.)
6 .வீட்டு மிருகங்களிலொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
7 .பிரயாணம்
இத்தகையோர் தாம் விட்ட நோன்புகளை மீட்கவும் ஒவ்வொரு 'முத்து'கொடுக்கவும் வேண்டும்.பிரயாணிகள் மூன்று காரணங்களுக்காக மட்டுமே நோன்பை விடலாம்.
1 . பிரயாணம் குறுகியதாக இருக்க வேண்டும்.(ஆகுமான அல்லது ஆகாத பிரயாணமாக இருந்தாலும் சரியே)
2 .பிரயாணம் நோன்பை விட முந்தியதாய் இருக்க வேண்டும்.
3 .விட்ட நோன்பைக் களாச் செய்வது முடியுமானவர்களாயிருத்தல்.
எனவே,நீண்ட பிரயாணிக்கு நோன்பை விடுவது ஆகாது.இவரும் பிறகு களாச் செய்ய நாடினால் விடுவது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக